பாப்பாண்டவரின் இலங்கை விஜயம் : திகதியை உறுதிசெய்தது வத்திக்கான்

இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸிற்கான விஜயத்தை பாப்பாண்டவர் பிரான்சிஸ், எதிர்வரும் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12 திகதி முதல் 19ஆம் திகதி வரையில் மேற்கொளவார் என வத்திக்கான் உறுதிப்படுத்தியுள்ளது.

pop-papprasar

பாப்பாண்டவரின் இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸிற்கான விஜயம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்போது அவர், பிலிப்பைன்ஸில் சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது வத்திக்கான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பாப்பாண்டவர் இலங்கையில் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை விஜயத்தில் ஈடுபடுவார் எனவும் அதன் பின்னர் பிலிப்பைன்ஸிற்கான விஜயத்தை மேற்கொள்வார் எனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.