பாப்பரசர், மடுவில் 14ஆம் திகதி திருப்பலி ஒப்புகொடுப்பார்

இலங்கைக்கு 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13ஆம் திகதி வருகை தரும் பாப்பரசர் பிரான்சிஸ், மன்னார் மடு திருத்தலத்திற்கு 14ஆம் திகதி வருகை தந்து மாலை 3 மணிக்கு திருப்பலி ஒப்புகொடுப்பார் என கர்தினால் வண. மல்கம் ரஞ்சித் ஆண்டகை உறுதிப்படுத்தியுள்ளதாக மடு திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை எமியான்ஸ் பிள்ளை தெரிவித்துள்ளார்.

pop-papprasar

இது தொடர்பாக அருட்தந்தை எமியான்ஸ் பிள்ளை மேலும் தெரிவிக்கையில்,

இலங்கைக்கு வருகை தரும் பாப்பரசர் பிரான்சிஸ், காலி முகத்திடலில் 14ஆம் திகதி காலை 8 மணிக்கு திருப்பலி ஒப்புக்கொடுப்பார். மாலை 3 மணிக்கு வரலாற்று பிரசித்தி பெற்ற மடுத்திருத்தலத்திற்கு வருகை தர இருக்கின்றார்.

மடுவிற்கு வருகை தரும் அவர் சுமார் ஒரு மணி நேரம், எமது மக்களோடு இணைந்து இறை வழிபாட்டில் ஈடுபட்டு அவர்களுக்கு ஆசிர் வழங்குவார் என்றும் அவர் கூறினார்.

Recommended For You

About the Author: Editor