பாடசாலை மாணவர்களுக்கு நாளை முதல் தடுப்பூசி!!

12 முதல் 19 வயதுக்கு உட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டத்தின் முதற்கட்ட நடவடிக்கையானது நாளை (24) ஆரம்பமாக உள்ளது.

கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையில் தடுப்பூசி வழங்கும் திட்டம் முதற்கட்டமாக ஆரம்பிக்கப்படவுள்ளது என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

மேலும் குருணாகல் மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் தடுப்பூசிகள் வழங்கும் நிகழ்வு தொடங்கப்படும் எனவும் சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.

தற்போது நிலவும் அசாதாரண சூழ்நிலையில், நமது பொருளாதார நிலைமை சரிவர நிர்வகிக்கப்படல் வேண்டும் எனவும் தொடர்ந்தும் நாட்டை முழுமையாக முடக்குவது என்பது முடியாத ஒன்று எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.