பாடசாலைகள் திறப்பு குறித்த அறிவிப்பு வெளியானது

சுகாதார அமைச்சின் அனுமதியுடன், திட்டமிட்டபடி, எதிர்வரும் ஓகஸ்ட் மாத இறுதியில் பாடசாலைகளை மீள திறக்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் சகல பாடசாலைளினதும் கல்வி மற்றும் கல்விசாரா உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் முகமாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் மேல் மாகாணத்தில் இன்று வரை, 97 சதவீதமான ஆசிரியர்கள் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

தென் மாகாணத்தில் 83 சதவீதமானோருக்கும் ஊவா மாகாணத்தில் 68 சதவீதமானோருக்கும் வடமேல் மாகாணத்தில் 58 சதவீதமானோருக்கும் வடக்கு மாகாணத்தில் 57 சதவீதமான ஆசிரியர்களுக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor