பாடசாலைகளில் அதிகரிக்கும் கொரோனா பரவல் – பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!

நாட்டில் உள்ள பாடசாலைகளில் அதிகளவான கொரோனா நோயாளர்கள் கண்டறியப்பட்டு வருவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எனவே, மூடப்பட்ட இடங்கள் மற்றும் சிறிய வகுப்பறைகளில் உள்ள பாடசாலை மாணவர்கள் மீது கவனம் செலுத்தப்பட வேண்டும் என அந்தச் சங்கத்தின் தலைவரான உபுல் ரோஹன தெரிவித்தார்.

புத்தளத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நிறைய மாணவர்கள் மற்றும் போதிய இடவசதி இல்லாத வகுப்பறைகளில் இருந்து அதிக எண்ணிக்கையிலான நோயாளர்கள் அடையளாம் காணப்படுகின்றனர் என்றும் இது கொத்தணிகளுக்கு வழிவகுக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பெற்றோர்களும் ஆசிரியர்களும் பாடசாலை மாணவர்கள் தொடர்பாக அவதானமாக இருந்தால் இவ்வாறான நிலைமையை ஓரளவு தவிர்க்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.