புளை பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட 20 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
யாழிலிருந்து வவுனியா நோக்கி சென்றுகொண்டிருந்த பேருந்து பளை பிரதேச செயலகத்தை அண்மித்த பகுதியில் காணப்பட்ட மஞ்சல் கடவையில் பாடசாலை மாணவன் ஒருவர் கடக்க முற்பட்ட வேளை குறித்த பேருந்தினை சாரதி கடடுப்பாட்டுக்குள் கொண்டு வர முயறசித்தார். அந்த வேளை கட்டுப்பாட்டை இழந்த பேருந்து துவிச்சக்கர வண்டியை மோதியதுடன் அருகில் உள்ள தேநீர் கடை மற்றும் புடைவைக்கடை ஆகியவற்றை உடைத்து உள்நுழைந்துள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்த மாணவன் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ் விபத்தில் மாணவனின் துவிச்சக்கர வண்டி முற்றாக சேதமாகியுள்ளதுடன் பேருந்தும் முற்றாக சேதமடைந்துள்ளது. இது குறித்த விசாரணைகளை பளை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.
இதே வேளை இவ் விபத்துக்கு எதிராக பாடசாலை மாணவர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகிறது.
காலை இடம் பெற்ற விபத்தில் பளை மத்திய கல்லூரியின் மாணவன் படுகாயங்களுக்குள்ளானார்.
பாடசாலைக்கு முன்னால் அமைந்துள்ள மஞ்சல் கடவையில் போக்குவரத்து பொலிசார் கடமையில் ஈடுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே பொலிசாருக்கு எதிர்ப்பு தெரிவித்து கல்லூரி மாணவர்கள் தற்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
ஆர்ப்பாட்டம் காரணமாக ஏ 9 வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதேவேளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கும் இராணுவத்தினருக்குமிடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.