பளைப் பகுதியில் மிதிவெடியில் சிக்கி ஒருவர் காயம்!

பளை, வேம்பொடுகேணிப் பகுதியில் மிதிவெடியில் சிக்கி ஒருவர் காயமடைந்தார்.

இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை மாலை 4.45 மணியளவில் இடம்பெற்றது.

இரும்புகள் பொறுக்குவதற்காக சென்றபோது இவர் மிதிவெடியில் சிக்கினார் எனத் தெரிவிக்கப்பட்டது.

பாலாவி வடக்கு, கொடிகாமத்தைச் சேர்ந்த ஹலோரஸ்ட் பணியாளரான டி.நாதன் (வயது 33) என்பவரே மிதிவெடியில் சிக்கி காயமடைந்தார்.

காயமடைந்த இவர் யாழ். போதனா வைத்தியசாலைக்கு எடுத்துவரப்பட்டார்.