பலாத்கார முயற்சி : தீக்குளித்த இலங்கை அகதி பலி

இந்தியாவின் வாலாஜாபேட்டை, இலங்கை தமிழர் முகாமில் தீக்குளித்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டையில் இலங்கை தமிழர் முகாம் உள்ளது. இங்கு வசிப்பவர் ஜெகதீஸ்வரன். இவரது வயது 45.இவர் மனைவி துஷாத்தினி வயது 26. கடந்த ஆகஸ்ட், 8ம் திகதி துஷாந்தினி வீட்டில் இருந்தார். அப்போது, அதே முகாமில் வசிக்கும் அவரது மைத்துனர் தயாபரன், அங்கு வந்துள்ளார்.

திடீரென தயாபரன், துஷாந்தினியிடம் தவறாக நடக்க முயன்றார். இதனால், தயாபரனிடம் இருந்து தப்பிக்க, தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். ஆபத்தான நிலையில், சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட துஷாந்தினி, நேற்று காலை, 10.00 மணிக்கு இறந்தார்.

வாலாஜாபேட்டை பொலிசார் தயாபரனை கைது செய்தனர். இறந்த துஷாந்தினிக்கு, மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர் என, தமிழக ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.

Recommended For You

About the Author: Editor