பருத்தித்துறை பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஐவர், நீதிமன்ற உத்தியோகத்தர் ஒருவருக்கு தொற்று உறுதி

பருத்தித்துறை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் ஐவர் மற்றும் நீதிமன்ற உத்தியோகத்தர் ஒருவர் என 6 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

பருத்தித்துறை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் மற்றும் பருத்தித்துறை நீதிமன்ற உத்தியோகத்தர்கள் இடையே கோவிட்-19 நோய்த்தொற்று உள்ளமை கடந்த சில நாள்களாக கண்டறியப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் பெறப்பட்ட மாதிரிகளில் 17 பேரின் மாதிரிகள் நேற்று பரிசோதனைக்கு உள்படுத்த நிலையில் மீளவும் பெறுமாறு அறிவுறுத்தப்பட்டது.

அவர்களில் பருத்தித்துறை பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட ஐவருக்கு தொற்று உள்ளமை மீளப் பெறப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில் கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன், பருத்தித்துறை நீதிமன்றில் பணியாற்றும் ஒருவருக்கும் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் ஐவரின் மாதிரிகளை மீளப்பெறுமாறு ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர்களால் அறிக்கையிடப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor