பருத்தித்துறையில் மகாத்மா காந்தி சிலை திறப்பு

பருத்தித்துறையில் மகாத்மா காந்தி சிலை நேற்று வியாழக்கிழமை மாலை திறந்துவைக்கப்பட்டது. சுமார் 30 வருடங்களின் பின்னர் மீண்டும் அதே இடத்தில் நிறுவப்பட்டு நேற்று திறந்துவைக்கப்பட்டது.

gandi-po

நகர சபைத் தலைவர் சபா. ரவீந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் இந்திய துணைத் தூதகரத்தின் பிரதி துணைத் தூதுவர் தட்சணாமூர்த்தி பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு சிலையை திரைநீக்கம் செய்து திறந்துவைத்தார்.

gandi-po2

இந்த விழாவில் வடமாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பருத்தித்துறை பிரதேச செயலர் இ.த.ஜெயசீலன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.

இந்திய சிற்பாசாரி ஒருவரால் நிர்மாணிக்கப்பட்ட இந்தச் சிலை காந்தியின் பிறந்த தினமான நேற்று திறந்துவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, காந்தியின் பிறந்த தினம் யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ். ஆஸ்பத்திரி வீதியில் அமைந்துள்ள மாகாத்மா காந்தி சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டு காந்தி சிலைக்கு மலர்மாலை அணிவித்தனர்.

தொடர்புடைய செய்தி

யாழில் காந்தியின் ஜனன தினம்