பத்திரிகை அலுவலகத்திற்கு முன்னால் விஜய் ரசிகர்கள் ஆர்ப்பாட்டம்

uthaynயாழில் இருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்றின் அலுவலகத்திற்கு முன்னால் இன்று நண்பகல் 12 மணியளவில் ஒன்று கூடிய விஜய ரசிகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

சமீபத்தில் திரைக்கு வந்த விஜய் நடித்த ஜில்லா திரைப்படம் தொடர்பாக குறித்த பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட விமர்சனத்தினை எதிர்த்தே ரசிகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

இவ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் “ ஜில்லா ரொம்ப மோசம் என்று எழுதியதன் காரணம் என்ன?” , “எங்களிடம் மன்னிப்புக் கேள்”, “ரசிகர்களின் மனதை காயப்படுத்தாதே”, “பிழையைத்திருத்து”, “ஜில்லா வெற்றிநடை போடுகின்றது” போன்ற வாசனங்களை ஏந்தியவாறு கோசம் போட்டதை காணக்கூடியதாக இருந்தது.