வடக்கில் யாழ்ப்பாணம் தொடங்கி கிழக்கில் திருகோணமலை வரை விரிவடைந்துள்ள பட்டதாரிகளின் போராட்டம் தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திரப் பட்டதாரிகள் சங்கத்தின் யாழ் மாவட்ட இணைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையிலேயே அவா் தெரிவித்துள்ளதாவது,
இன்று யாழ்ப்பாணத்தில் பட்டதாரிகளால் சுழற்சி முறைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு நடைபெறுகின்றது .இது கிழக்கிலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
பட்டதாரிகளினால் முன்னெடுக்கப்படும் இந்தப் போராட்டம் குறித்து அரச தலைவருக்குத் தெரியப்படுத்தியுள்ளேன்.
இதன் அடிப்படையில் அரச தலைவா் நாடளாவிய ரீதியான பட்டதாரிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய உறுப்பினர்களை இந்த மாதம் சந்தித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறிக் கலந்துரையாடலுக்கான திகதியையும் அவர் கொடுத்துள்ளார்.
இந்த மாதம் நடைபெறும் ஸ்ரீலங்கா சுதந்திரப் பட்டதாரிகள் சங்கத்தின் அமர்வில் இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வு எட்டப்படும்- என்றார்.