நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷ சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
பொலிஸ் நிதி மோசடி பிரிவிற்கு வாக்குமூலம் அளிக்கச் சென்ற பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டனர்.
நேற்று இரவு கடுவல நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட மூவரும் மே மாதம் 5ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.