நைஜீரியாவில் குண்டு வெடிப்பு : குறைந்தது 15 பேர் பலி

நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதி நகரான மைதகுரியியில், ஜனசந்தடி மிகுந்த ஒரு அங்காடிப் பகுதியில் இடம்பெற்றுள்ள ஒரு குண்டுவெடிப்பில் குறைந்தது 15 பேர் உயிரழந்துள்ளனர்.

nigeria_blast

அடுப்புக்கரி நிரப்பப்பட்டிருந்த ஒரு வாகனத்தில் இந்த குண்டு பதுக்கி வைக்கப்பட்டிருந்தது என பாதுகாப்பு அமைச்சகம் கூறுகிறது.

இந்தத் தாக்குதலுக்கு யார் காரணம் என்று இதுவரை தெளிவாகத் தெரியவிலை என்றாலும், மைதுகுரிப் பகுதியில் அவசரகால உத்தரவுள் பிறப்பிக்கப்பட்டிருந்தாலும், இஸ்லாமியத் தீவிரவாதக் குழுவான போக்கோ ஹராம் அந்தப் பகுதியில் செயல்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஆனால் முன்னதாக நைஜீரிய அதிகாரிகளோ, போக்கோ ஹராமின் புலனாய்வு வலையமைப்பை தகர்த்து அதன் தலைவரை கைது செய்துள்ளதாக தெரிவித்திருந்தனர்.

கடந்த ஏப்ரல் மாதம் வடகிழக்கு நைஜீரியாவில் சுமார் 300 பள்ளி மாணவிகள் கடத்தப்பட்ட சம்பவத்தில், ஈடுபட்டிருந்த பாபுஜி யாரீ என்று அடையாளம் காணப்பட்டுள்ள நபரே கைது செய்யப்பட்டுள்ளார் என்று பாதுகாப்பு அமைச்சகப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் கிறிஸ் ஒலுகொலாடே தெரிவித்துள்ளார்.

Related Posts