நீரிழிவு நோய் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு

நவம்பர் மாதம் நீரிழிவு நோய்க்குரிய மாதமாக அந்த நோய் பற்றிய விழிப்புணர்வுக்குரிய மாதமாக உலகில் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக நவம்பர் 14 ம் திகதியை உலக நீரிழிவு நோய்க்கான தினமாக பிரகடனப்படுத்தப்பட்டு உலக நாடுகளின் சுகாதார திணைக்களங்களும் வைத்திய துறை சார்ந்த பல்வேறு நிறுவனங்களும் இந்த தினத்தில் நீரிழிவு நோய் பற்றிய விழிப்புணர்வினை தூண்டி வருவதுடன் இந்த நோயை கட்டுப்படுத்துவதற்கான பல நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றன.

இதேவேளை இன்றைய தினம் உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு யாழ்.போதனா வைத்தியசாலை நீரிழிவு சிகிச்சை நிலையம் நடாத்தும் சுகாதார விழிப்புணர்வு கருத்தரங்கு ஒன்று இடம்பெற்றது.

இன்று காலை 9மணியளவில் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்று வருகின்ற நிகழ்விற்கு யாழ்.போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் ஸ்ரீபவானந்த ராஜா பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.

மேலும் இந்த கருத்தரங்கில் யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர்கள் ஊழியர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.