நியூசிலாந்தில் தாக்குதலை நடத்திய இலங்கையர் பொலிஸாரால் சுட்டுக் கொலை!

நியூசிலாந்தில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் மக்கள் மீது தாக்குதலை நடத்திய ஒருவர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

பொலிஸாரின் தீவிர கண்காணிப்பில் இருந்த குறித்த நபர் ஐ.எஸ். அடிப்படைவாத கொள்கைகள் கொண்ட இலங்கையர் எனவும் இது தீவிரவாத தாக்குதல் எனவும் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கமொன்றின் கொள்கைகளை கொண்டிருந்த அவரின் பெயரை வெளியிட நியூசிலாந்து விரும்பவில்லை என்றும் சர்வதேச தெரிவுகள் தெரிவிக்கின்றன.

2011 ஆம் ஆண்டு நியூசிலாந்து சென்றுள்ள குறித்த நபர் 2016 ஆம் ஆண்டு முதல் நியூசிலாந்தின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கியவராக கருத்தப்பட்டுள்ளார்.

அவரது சித்தாந்தம் குறித்த கவலைகள் காரணமாக தீவிர கண்காணிப்பு வலயத்தில் இருந்த குறித்த இலங்கையர் மக்கள் மீது தாக்குதலை நடத்தி 6 பேரை படுகாயமடைய செய்துள்ளார்.

எனினும், ஆறு பேர் காயமடைவதற்கு முன்பு ஏன் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.