நியமனம் வழங்கும் தீர்மானத்தினை தொண்டர்கள் ஏற்க மறுப்பு

யாழ்.போதனா வைத்தியசாலை தொண்டர்களின் நிரந்தர நியமனம் தொடர்பாக இன்று வியாழக்கிழமை அளிக்கப்பட்ட உறுதிமொழியினை தொண்டர்கள் ஏற்கமறுத்துள்ளனர்.

JaffH (2)

வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் பவானி பசுபதிராஜா, யாழ்.மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவர் பொன்.பாலசுந்தரம்பிள்ளை ஆகியோருடன் வடமாகாண ஆளுநர் அலுவலத்தில் தொண்டர்களில் நால்வர் சந்திப்பினை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது, முதலில் 80 பேருக்கும் மிகுதிப்பேருக்கு அமைச்சரவைப் பத்திரம் தாக்கல் செய்தவுடன் நிபந்தனைகளின் அடிப்படையில் நியமனங்கள் வழங்குவதாக அறிவித்ததுடன், இந்தக் கலந்துரையாடல் முடிவுற்றது.

தொடர்ந்து, குறித்த நான்கு தொண்டர்களுக்கும் மற்றைய தொண்டர்களுக்குமிடையில் வைத்தியசாலையில் சந்திப்பு மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, 123 பேருக்கு நிரந்தர நியமனத்தில் நிபந்தனைகளுடன் வழங்குதல் (கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறு) என்ற கருத்தினை ஏற்க மறுத்த அவர்கள் இந்தப் போராட்டத்தினை தொடர்ந்து முன்னெடுத்து தமக்கு நிபந்தனைகளற்ற நியமனம் வழங்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.

தமது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக தொண்டர்கள் தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி

தொண்டர் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதாக உறுதிமொழி