Ad Widget

நிபுணர்குழு அறிக்கை எமது நிலைப்பாட்டுக்கு விரோதமானால் போராட்டம்: சிவமோகன்

Sivamohan-vanniவடமாகாண சபையினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை எமது நிலைப்பாட்டுக்கு விரோதமாக இருந்தால் எங்களுடைய வாழ்வுக்காக உச்சக்கட்ட, சாத்வீகமான, உறுதியான போராட்டத்தில் குதிப்போம் என்று இரணமடு கமக்கார அமைப்புக்களின் சம்மேளனச் செயலாளர் எம்.சிவமோகன் தெரிவித்துள்ளார்.

இரணைமடுவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு நீர் கொண்டுவருதல் தொடர்பான ஊடகவியலாளர் சந்திபொன்று இன்று (21) யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்றது. இதில் கருத்துதெரிவிக்கும் போதே சம்மேளனச் செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘தற்போதைய நிலையில் வரட்சி காரணமாக எங்களுடைய அரிசியை நாமே உண்ண முடியாத நிலைமை காணப்படுகின்றது. சராசரி ஏழு ஆண்டுகளுக்கு ஒரு முறை வரட்சி கால நிலை காணப்படுகின்றது.

பொருட்களுக்கான தட்டுப்பாடுகள் என்பது தொடரும் அபாய நிலையிலுள்ளமையால் விவசாய சமூகம் சார்ந்து இதனை சிந்திக்காது எதேச்சதிகாரத்தனமாக யோசிப்பதனை சம்பந்தப்பட்டவர்கள் கைவிடவேண்டும்.

இரணைமடு குடிநீர்த்திட்டம் தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் மிகத் தெளிவாக தெரிவித்திருந்தோம். அவர் எம்மிடம் கருத்துத் தெரிவிக்கும்போது, இரணைமடு விடயம் தொடர்பில் முடிவெடுப்பதற்காக நிபுணர்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் நிபுணர்குழுவின் அறிக்கையின் அடிப்படையிலேயே நீர் விவகாரம் தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

குறித்த நிபுணர்குழு இதுதொடர்பான அறிக்கைகளை வடமாகாண சபையிடம் ஒப்படைத்திருப்பதாக நாம் அறிகின்றோம். இந்நிலையில் குறித்த அறிக்கையின் பிரதியினை நாங்கள் பார்வையிடுவதற்கு கோரியிருக்கின்றோம். எனினும் இதுவரையில் அது எங்களிடம் கையளிக்கப்படவில்லை.

இரணைமடு தொடர்பிலான ஆசிய அபிவிருத்தி வங்கியுடனான ஒப்பந்தமும் கிளிநொச்சி விவசாயிகளாகிய எம்மிடம் கலந்தாலோசிக்கப்படாமலேயே கைச்சாத்திடப்பட்டுள்ளது என்பதனை நாம் இந்த இடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

இரணமடு – யாழ் நீர் விநியோகத்திட்டம் தொடர்பில் எந்தவொரு ஆய்வுகளும் மேற்கொள்ளாமல் பொய்யான முன்மொழிவுகளினை வைத்து ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் இருபதாயிரம் மில்லியன் ரூபா கடன் திட்டத்திற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

இரணைமடு-யாழ் நீர் விநியோகத்திட்டம் கொண்டு செல்வது தொடர்பில் விவசாய சமூகத்திற்கு எதுவித பிரச்சனைகளும் இல்லையென்றும் அவர்கள் பற்றி ஆய்வு செய்ய தேவையில்லையென்றும் எல்லாக்காலமும் இரணைமடுவில் இருந்து தொடர்ந்து நீர் வழங்கப்படும் எனவும் சிறுபோக நெற்செய்கையை மாற்றி உப உணவு செய்கைக்கு மாற்றும் திட்டம் முன்வைக்கப்பட்டு நீர் கணக்கிடப்பட்டு இத்திட்டம் செயற்படுத்தப்படுமென ஆசிய அபிவிருத்தி வங்கிக்கு உறுதிமொழிகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் இது பற்றி சம்பந்தப்பட்ட எவரும் வாய் திறக்காமல் உள்ளார்கள்.

இங்கு நீர்ப்பாசனத் திணைக்களமும் நீர் வழங்கல் வடிகால் அமைப்புச் சபையும் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்தியுள்ளார்கள். இந்த உடன்படிக்கையில் 13 அம்சங்கள் உள்வாங்கப்பட்டுள்ளன. இவற்றில் விவசாயிகள் நலன் சார்ந்த விடயங்கள் இடம்பெறவில்லை.

இதில் 09 இற்கும் மேற்பட்ட அம்சங்கள் எமக்கு பாதகமாகவே உள்ளன. இவை திருத்தப்படுவதாக கூறியும் ஆசிய அபிவிருத்தி வங்கிக்கு வழங்கிய உறுதி மொழிகளால் இன்று வரை இவை திருத்தப்படாமல் உள்ளது.

இதுவரையில் இத்திட்டம் சார்ந்த எதுவித கருத்துக்களையும் நீர்ப்பாசனத்திணைக்களம் சார்ந்த எவரும் கூறவில்லை. ஏனெனில் இதனால் விவசாய சமூகத்திற்கு பாரிய பாதிப்பு உள்ளது என்பது அவர்களுக்கு தெரியும்.

இத்திட்டத்தால் விவசாயிகளாகிய எமக்கு பாரிய பிரச்சனைகள் ஏற்படும். குறிப்பாக 1500 இற்கும் மேற்பட்ட வயல் நிலங்கள் நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் இணைக்க வேண்டி உள்ளது. 1936ஆம் ஆண்டளவில் அப்பகுதியில் குடியேற்றப்பட்ட மக்களின் காணிகள் தற்போது சிறுதுண்டுகளாக உள்ள நிலையில் சிறு விவசாயிகளுக்கு 100 வீதம் பங்குரிமை கிடைக்கவேண்டுமெனவும’ அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts