நாய்கள் ஜாக்கிரதை மற்றொரு அந்நியனா?

சிபிராஜ் நீண்ட இடைவேளைக்கு பிறகு நடித்திருக்கும் படம் நாய்கள் ஜாக்கிரதை.

இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.இதில் சிபிராஜுக்கு ஏதோ புது விதமான நோயால் தாக்கப்பட்டது போல் காண்பிக்கப்பட்டுள்ளது.

naaikal_j_anniyan001

முகமுடி அணிந்து யாரோ கொலை செய்வது போல் ட்ரைலரில் வருகிறது.ஒரு கட்டத்தில் சிபி வளர்க்கும் நாய் அவரை பார்த்தே குரைக்கிறது, இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது படத்தில் ஹீரோ, வில்லன் இரண்டுமே சிபிராஜ் தான் என்பது போல் தெரிகிறது.

இதே கதையம்சம் கொண்ட கதை தான் ஷங்கர் இயக்கத்தில் சில வருடங்களுக்கு முன் வெளிவந்த அந்நியன் திரைப்படமும். ஆனால் அதில் நல்ல விஷயத்திற்காக விக்ரம் கொலை செய்வார்.சிபிராஜ் எதற்கு கொலை செய்கிறார் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.