நான்காவது தடுப்பூசியும் வழங்க வாய்ப்பு : தடுப்பூசி அட்டைகளை பாதுகாப்பாக வைத்திருக்குமாறு சுகாதார அமைச்சு கோரிக்கை!

எதிர்காலத்தில் நான்காவது டோஸுக்கு தேவைப்படும் பட்சத்தில், கோவிட்-19 தடுப்பூசி அட்டைகளை பாதுகாப்பாக வைத்திருக்குமாறு சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம், மருத்துவர் ஹேமந்த ஹேரத் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.

“தற்போது வழங்கப்பட்டுள்ள தடுப்பூசி அட்டை எடுத்துச் செல்வதற்கு ஏற்றதல்ல.

ஒரு தரவுத்தளத்தில் தகவல் சேர்க்கப்படும் வரை மற்றும் QR குறியீடு அமைப்பு அறிமுகப்படுத்தப்படும் வரை தடுப்பூசி அட்டையை பாதுகாப்பாகப் பயன்படுத்த வேண்டும்.

எதிர்காலத்தில் அலைபேசி ஊடாக இந்த முறைமையைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இதன்படி, தடுப்பூசி அட்டையை லேமினேட் செய்வதை தவிர்க்கவேண்டும்” என்றும் சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor