நாட்டில் மேலும் ஐவர் கொரோனா தொற்றினால் மரணம்!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் ஐவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

,இதன்படி, கொழும்பு-10 பகுதியைச் சேர்ந்த 65 வயது ஆண், இரத்மலானை பகுதியைச் சேர்ந்த 69 வயதுடைய பெண் மற்றும் கிருலப்பனை பகுதியைச் சேர்ந்த 71 வயது பெண் ஆகியோர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், கொழும்பு-2 பகுதியைச் சேர்ந்த 81 வயது பெண் மற்றும் தெமடகொட பகுதியைச் சேர்ந்த 82 வயது ஆண் ஒருவரும் கொரோனாவால் மரணித்துள்ளனர்.

இந்நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66ஆக அதிகரித்துள்ளது.

Recommended For You

About the Author: Editor