நாக விகாரைக்கு தானம் வழங்கும் நிகழ்வு!

வெசாக் தினத்தை முன்னிட்டு பொது அமைப்புக்களினால் யாழ்ப்பாணம் நாக விகாரைக்கு தானம் வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

ஒவ்வொருவருடமும் வெசாக் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் நாக விகாரையில் வசிக்கின்ற பௌத்த துறவிகளுக்கு குறித்த தானம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்று வருகின்றது.

இன்றைய வருடமும் நாக விகாரையில் அமைந்துள்ள இந்து பௌத்த ஸ்தலங்களில் பூஜை வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு தானம் வழங்கி வைக்கப்பட்டன.

பௌத்த துறவிகளால் பிரித்து ஓதுதல் வழிபாடும் இந்து பூசகரால் இந்து பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றன.

குறித்த நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பொன் பாலசுந்தரம்பிள்ளை, கலாநிதி சிதம்பரம் மோகன் கலாநிதி ஆறுதிருமுருகன் மற்றும் பௌத்த துறவிகள் இந்து குருமார்கள் யாழ் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.