நல்லூர் ஆலயம் – நாவலர் வீதிவரையான கோயில் வீதி ஒரு மாதத்துக்கு மூடப்படுகிறது

யாழ்ப்பாணம் கோயில் வீதியில் நாவலர் வீதி தொடக்கம் நல்லூர் ஆலயம் வரையான பகுதி போக்குவரத்து ஒரு மாதகாலத்துக்கு இடைநிறுத்தப்படுவதாக மாநகர முதல்வர், சட்டத்தரணி வி.மணிவண்ணன் அறிவித்துள்ளார்.

நல்லூரான் வளைவு கட்டுமானப் பணிக்கு வசதியாக நாளைமறுதினம் மார்ச் 7ஆம் திகதி மணி தொடக்கம் ஒரு மாத காலத்துக்கு இந்தப் போக்குவரத்துத் தற்காலிக தடை நடைமுறையில் இருக்கும் என முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு மாற்றுப் பாதையாக நல்லூர் ஆலயத்திலிருந்து கோவில் வீதியுடாகச் செல்லும் சிறிய வாகனங்கள் செட்டித்தெரு வீதி – செட்டித்தெரு ஒழுங்கை ( சின்னமயா மிஷன் வீதி) ஊடாகவும் நாவலர் வீதியிலிருந்து நல்லூர் ஆலயத்துக்கு கோயில் வீதியில் பயணிக்கும் வாகனங்கள் செட்டித்தெரு ஒழுங்கை – செட்டித்தெரு ஊடாகவும் பயணிக்க முடியும்.

கனரக வாகனங்கள் இந்தப் பாதையை பயன்படுத்தத் தடை என்று யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor