நல்லூருக்கு மட்டும் ஏன் மாநகர சபை உதவி செய்கின்றது? – இளங்கோவன்

யாழ். மாநகர சபை நல்லூர் ஆலய உற்சவகாலத்தில் பல உதவிகளைச் செய்வது போல, எல்லைக்குட்பட்ட இடங்களிலுள்ள ஏனைய ஆலயங்களுக்கும் உதவிகள் செய்வதில்லையென மாநகர சபை ஆளுங்கட்சி உறுப்பினர் துரைராசா இளங்கோவன், சபையில் நேற்று வியாழக்கிழமை (31) கேள்வியெழுப்பினார்.

2(3434)

யாழ். மாநகர சபையின் மாதாந்த கூட்டத் தொடர் மாநகர சபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா தலைமையில் மாநகர சபை கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்றது.

இதன்போதே இளங்கோவன் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த முதல்வர், ஏனைய ஆலயங்களிலுள்ள குறைபாடுகள் தொடர்பாக உரிய நேரத்தில் எழுத்து மூலம் அறியத்தந்தால் அதற்குரிய நடவடிக்கை எடுத்து உதவிகளை யாழ். மாநகர சபை வழங்கும் எனத் தெரிவித்தார்.