நல்லூரில் குறும்படப் போட்டி

கலைஞர்கள் படைப்பாளிகள் மற்றும் தயாரிப்பாளர்களை ஊக்கிவிக்கும் நோக்கில் நல்லூர் பிரதேச கலாசாரப் பேரவை பிரதேச மட்டத்திலான குறும்படப் போட்டியை நடத்தவுள்ளது.

இதன்படி சமூகத்தில் உள்ள முரண்பாடுகள் கலாசார சீரழிவுகளைத் தகர்த்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடியதாக இந்தக் குறும்படங்கள் அமையவேண்டும் என்பதுடன் 10 -15 நிமிடங்கள் வரையுள்ளதாக இருத்தல் வேண்டும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

ஒருவர் எத்தனை குறும்படங்களையும் அனுப்பமுடியும் என்பதுடன் ஒரு படத்தின் மூன்று பிரதிகள் போட்டிக்கு சமர்பிக்க வேண்டும்.

போட்டிக்கான விண்ணப்பப் படிவங்களை நல்லூர் பிரதேச கலாசாரப் பிரிவில் பெற்று கிராம உத்தியோகத்தரின் பரிந்துரையுடன் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

போட்டியின் போது தெரிவு செய்யப்படும் 5 போட்டியாளர்களுக்கு பெறுமதி மிக்கப் பரிசில்கள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.