நடிகர் எம்.எஸ். பாஸ்கர் மரணமா? திரையுலகினர் அதிர்ச்சி!

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த ஒரு சிலர்களில் எம்.எஸ்.பாஸ்கர் ஒருவர். இவரை பல பேருக்கு பட்டாவி என்றால் தான் தெரியும், அந்த அளவிற்கு அந்த கதாபாத்திரத்தில் கலக்கியிருப்பார்.

Ms-Baskar

தற்போது பல சமூக வலைத்தளங்களில் இவர் இறந்ததாக ஒரு தகவல் பரவி வந்தது, இதனால் திரையுலகத்தினர் பலரும் அதிர்ச்சியடைந்தனர்.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கத்தில் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்று வந்த அவர் ‘பேஸ்புக்கில் எம்.எஸ்.பாஸ்கர் காலமானார் என்று புகைப்படத்துடன் செய்தி இருந்தது.

வீண்வதந்திகளை ரசிகர்கள் நம்ப வேண்டாம். நான் எப்போதும் போலவே ஆரோக்கியமாக இருக்கிறேன்.

இந்த வதந்தியை பரப்புகிறவர்கள் என் வீட்டிலும் வயதானவர்கள் இருக்கிறார்கள் அவர்களுக்கு இந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தி ஏதேனும் நேர்ந்து விடச் செய்யலாம் என்பதை உணர வேண்டும்.

ரசிகர்கள் அன்பாலும், அருளாலும், ஆதரவாலும் நன்றாக இருக்கிறேன்.’ என்று தெரிவித்துள்ளார்.