த.தே.கூ.வை இந்தியா வற்புறுத்தவில்லை – சுரேஷ் எம்.பி

‘இலங்கையில் தமிழ் மக்களின் தீர்வுத்திட்டம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொண்டுள்ள ஸ்திரத் தன்மையை கைவிடும்படி இந்திய அரசாங்கம் தம்மைக் கோரவில்லை’ என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.

suresh

‘இலங்கையின் உள்நாட்டு பிரச்சினையை வெளிநாடுகளுக்கு கொண்டு செல்வதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைவிட வேண்டும்’ என இந்தியா வலியுறுத்தியுள்ளதாக வெளியாகிய செய்தி தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்திய அரசின் அனுமதிக்காக காத்திருக்கிறோம். இன்னமும் உறுதிப்படுத்தப்பட்ட திகதியை இந்திய அரசு அறிவிக்காததால், புதுடெல்லி செல்வது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தலை வெளியிட முடியாமல் இருக்கின்றோம்.

இந்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இந்திய அரசு அழுத்தம் கொடுப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி குறித்து எம்மால் எதனையும் கூறமுடியாதுள்ளது. எம்மிடம் உத்தியோகபூர்வமாக எதனையும் இந்தியா வற்புறுத்தவில்லை. உத்தியோகபூர்வமற்ற ஊகங்களுக்கு எம்மால் பதில் கூற முடியாது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான உயர்மட்டக் குழுவினரை சந்திக்கின்றபோது இவ்வாறான அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுமானால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிச்சயமாக தனது நிலைப்பாட்டை அறிவிக்கும்’ என அவர் மேலும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor