த.தே.கூ. எதிராக ஐ.நா.மனித உரிமை பேரவையில் முறைப்பாடு

தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் முறைப்பாடு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வட மாகாணத்தில் உள்ள புத்தர் சிலைகளை அகற்றுமாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கோரி வருகின்றமையால் குறித்த முறைப்பாடு தெரிவிக்கப்படவுள்ளது.

முறைப்பாட்டினை வெளிநாடுகளில் உள்ள இலங்கை வாழ் அமைப்புக்கள் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நல்லிணக்க பொறிமுறைகளை மீறும் வகையில் செயற்படுவதாக கூறியே குறித்த முறைப்பாடு ஐ.நா.மனித உரிமை பேரவையின் ஆணையாளர் செயிட்ராட் அல் ஹுசைனிடம் தெரிவிக்கப்படவுள்ளது.

Recommended For You

About the Author: Editor