த.தே.கூட்டமைப்பை கேலி செய்து துண்டுப்பிரசுரம்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கட்சியின் தலைவா இரா.சம்பந்தன், தமிழரசு கட்சியின் தலைவா மாவை சேனாதிராசா மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஆகியோரை கேலி செய்து யாழ்ப்பாணத்தின் பல்வேறு இடங்களிலும் துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன.

1(7173)

சர்வதேச ஜனநாயக தினம் இன்று திங்கட்கிழமை(15) கொண்டாடப்படும் நிலையில், அன்றைய ஜனநாயகம் – இன்றைய ஜனநாயகம் என பிரசுரிக்கப்பட்டு இரண்டு விதமான கேலிச்சித்திரங்கள் வரையப்பட்டுள்ளன.

அதன் கீழ் மேற்படி மூன்று அரசியல்வாதிகளும் செல்வ செழிப்புடன் இருப்பதாக குறிப்பிடப்பட்டு அவர்களின் புகைப்படங்களும் அச்சிடப்பட்டுள்ளன.