தொலைக்காட்சி எமது பாரம்பரிய கலைகளை மழுங்கடிக்கின்றது-முதலமைச்சர்

சினிமாக்களும்,தொலைக்காட்சிகளும் எமது பாரம்பரிய கலைகளை மழுங்கடித்து விட்டது என முதலமைச்சர் தெரிவித்தார்.

vicky

நேற்று இரவு 7மணியளவில் நல்லூர் சங்கிலியன் தோப்பில் இடம்பெற்ற கர்நாடக சங்கீத கச்சேரி நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் ஆரம்ப காலங்களில் விளையாட்டுக்களும், இசைகளும் வீணான பொழுதைக் கழிப்பவையாக இருந்தன.ஆனால் இன்றோ மனித வாழ்க்கையில் முக்கிய பங்காக அமைந்துள்ளது.

நல்லூர் சூழலில் தெய்வீக சுகானுபவம் நடத்தப்பட்டவை சிறப்பானதொரு விடயமாகவும் இசைக் கலைஞர்களுக்கு சிறந்ததொரு விருந்தூட்டலாக அமைந்துள்ளமை வரவேற்கத்தக்கது என முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றி கல்வியமைச்சர் குருகுலராஜா அவர்கள் தனது உரையில்

கலைகள் ஊடாக தமிழக உறவுகளோடு ஒன்றிணைந்து விட்டோம் தெரிவித்தார்.

மேலும் அவர் இலங்கையின் வடபுலத்தமிழர்களையும்,தென்னிந்திய தமிழர்களையும் ஒன்றிணைக்கும் மாபெரும் சக்தியாக கலைகள் உருவெடுத்துள்ளன.

மேலும் இக்கலையம்சத்தின் ஊடாக மக்கள் பெருமளவு பயன்களைப் பெறுவர் என அவர் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor