சுவிஸ் அரசாங்கத்தின் நிதியுதவின் கீழ் அமைக்கப்பட்ட வீட்டுத்திட்டத்தை இன்று புதன்கிழமை சுவிஸ் வெளிவிவகார அமைச்சர் டிடீயர் புர்கால்ட்டர் திறந்துவைத்து பயனாளிகளிடம் கையளித்தார்.
தொண்டமானாறு, அக்கரைப்பகுதியில் இந்த வீட்டுத்திட்டம் கையளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் சுவிஸ் அதிகாரிகள் ஹலோட்ரஸ்ட் நிறுவனத்தின் அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.