தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு லயன்ஸ் கழகம் உதவி

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு சுன்னாகம், மல்லாகம் தெல்லிப்பழை, மானிப்பாய் நகரம், உரும்பிராய், இணுவில் ஆகிய லயன்ஸ் கழகங்கள் இணைந்து செயற்றிட்டங்களை இன்று வியாழக்கிழமை காலை 11.00 மணியளவில் மேற்கொண்டுள்ளன.

lions-tellippalai-hospital

நிகழ்வில் 36 ஊன்றுகோல்களும், 3 சக்கர நாற்காலிகளும், 24 கண் வில்லைகளும் வழங்கப்பட்டதுடன், வைத்தியசாலை வளாகத்தில் பயன்தரு மரங்களும் லயன்ஸ் கழகங்களால் நடப்பட்டன.

மேற்படி நிகழ்வில் லயன்ஸ் கழகங்களின் மாவட்டத் தலைவர் லயன் சுந்தரேஸ்வரன், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை பதில் அத்தியட்சகர் வைத்திய கலாநிதி திவாகரன், லயன்ஸ் கழக இரண்டாவது உதவி மாவட்ட ஆளுநர் வைத்தியகலாநிதி லயன் வை.தியாகராஜா, தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்கச் செயலாளர் லயன் சி.ஹரிகரன் ,வலி.வடக்கு பிரதேச சபை தவிசாளர் லயன் சோ.சுகிர்தன், லயன்ஸ் கழக மாவட்டத்தின் முதற்பெண்மணி றொஸ்னி இக்னேசியஸ் கமிலஸ், ஆளுநர்சபை பொருளாளர், ஆளுநர்சபை இணைப்பாளர்கள், ஆளுநர்சபை உறுப்பினர்கள், லயன்ஸ் கழக அங்கத்தவர்கள், வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்க உறுப்பினர்கள், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை பதில் அத்தியட்சகர் வைத்திய கலாநிதி திவாகரன், லயன்ஸ் கழக இரண்டாவது உதவி மாவட்ட ஆளுநர் வைத்தியகலாநிதி லயன் வை.தியாகராஜா, தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்கச் செயலாளரும் லயன்ஸ் கழக வலயத் தலைவருமாகிய லயன் சி.ஹரிகரன் ஆகியோர் உரையாற்றினர்.