தீபாவளியை வீடுகளிலிருந்து கொண்டாடுங்கள் என இந்து மதத் தலைவர்கள் வேண்டுகோள்!

இம்முறை தீபாவளியை இந்துக்கள் வீடுகளில் இருந்து இறைவனைப் பிரார்த்தனையோடு கொண்டாடுங்கள் என என இந்து மதத் தலைவர்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் நேற்றையதினம் (வியாழக்கிழமை) இந்து மாமன்றத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு அழைப்பு விடுத்துள்ளனர்.

உலகளாவிய ரீதியில் கொரோனாதாக்கம் அதிகரித்துவரும் நிலையில் இலங்கையிலும் தற்போது தொற்று வீதம் அதிகரித்துக் காணப்படுகின்றது இந்த நிலையில் இந்துக்களின் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது எனவே தற்போதுள்ள நிலைமையை கருத்தில் கொண்டு இந்து மக்கள் தீபாவளியை வீடுகளிலிருந்து ஒன்றுகூடல்களை தவிர்த்துஅகவணக்கம் ஊடாக தீபாவளியை கொண்டாடுங்கள்

அவ்வாறு கொண்டாடுவதன் மூலம் தொற்று ஏற்படுவதை தடுக்க முடியும் அதோடு தீபாவளி நாளன்று ஆலயங்களுக்கு சென்று வழிபாட்டினை மேற்கொள்ளாது வீடுகளிலிருந்து தத்தமது குலதெய்வங்களை பிரார்த்தியுங்கள் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்கள்

Recommended For You

About the Author: Editor