தியாக தீபம் திலீபனின் 34ஆவது நினைவேந்தல் ஆரம்ப நாளில் அஞ்சலி

இந்திய – இலங்கை அரசுகளிடம் நீதி கோரி – 5 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, உணவு ஒறுப்பிலிருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 34ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று உணர்வு பூர்வமாக ஆரம்பமானது.

1987 செப்ரெம்பர் 15ஆம் திகதி நல்லூர் கந்தசுவாமி ஆலய வடக்கு வீதியில், உணவு ஒறுப்பை ஆரம்பித்த தியாக தீபம் திலீபன், 11ஆவது நாளான, செப்ரெம்பர் 26ஆம் திகதி உயிர்நீத்தார்.

அவரது தியாகத்தை நினைவுகூரும் வகையில், உணவு ஒறுப்பை ஆரம்பித்த 34ஆவது ஆண்டு நினைவு நாளான, இன்று நல்லூரில் உள்ள திலீபனின் நினைவிடத்தில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

நல்லூர் நினைவேந்தல் தூபிக்கு இன்று மாலை சென்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் ஈகச்சுடர் ஏற்றி, திலீபனின் உருவப்படத்துக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு, வணக்கம் செலுத்தினர்.

Recommended For You

About the Author: Editor