தாக்குதலுக்கு தயாராகவிருந்ததாக இளைஞர் ஒருவர் வாளுடன் கைது

தாக்குதல் நடத்தத் திட்டமிட்டு வீட்டில் வாள் ஒன்றை மறைத்து வைத்திருந்த இளைஞர் ஒருவர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் மாவட்ட சிறப்புக் குற்றத்தடுப்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கோப்பாய் ஜிபிஎஸ் வீதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

வன்முறைகளுடன் தொடர்புடைய சிலர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களுடன் அலைபேசியில் தொடர்பில் இருக்கும் சந்தேக நபர், வாள்வெட்டுத் தாக்குதல் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளார் என்று கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அவரிடம் கைப்பற்ற வாளும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor