தலைவரின்றி இறுதி நாள் சாட்சியங்கள் பதிவு

missing-people-presidentகாணமற் போனவர்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு, யாழில் இன்று மேற்கொள்ளும் இறுதி நாள் சாட்சியங்கள், ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பராக்கிரம பரணஹம இல்லாமல் பதிவுசெய்யப்படுகின்றன.

இந்த ஆணைக்குழுவின் சாட்சியங்களை பதிவு செய்யும் செயற்பாடு கடந்த வெள்ளிக்கிழமை முதல் நேற்று ஞாயிற்றுக்கிழமை வரை யாழ். மாவட்டத்தின் பல இடங்களில் இடம்பெற்றன.

இறுதி நாள் சாட்சியங்கள் யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று இடம்பெற்று வருகின்றது. இந்த அமர்வுகள் அனைத்திலும் ஆணைக்குழுவின் தலைவர் கலந்துகொண்டார்.

எனினும் இறுதி நாளான இன்றைய அமர்வில் அவர் பங்கேற்கவில்லை. சுகயீனம் காரணமாக அவர் கலந்துகொள்ளவில்லை என மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.