தலைமைத்துவ பயிற்சியால் மாணவர்களின் பல்கலைக்கழக பதிவுகள் பாதிக்காது

Leadership2012/2013ம் கல்வி ஆண்டின் பல்கலைக்கழக அனுமதிக்காக தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சிகளின் மூன்றாம் கட்டம் எதிர்வரும் 18ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இதில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு பயிற்சிகள் முடிவடைந்ததும், ஒரு வார காலப்பகுதிக்குள், பல்கலைக்கழக பதிவுக்கான சந்தரப்பம் வழங்கப்படும் என, உயர் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் சுனில் ஜயந்த நவரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை எதிர்வரும் 18ம் திகதி ஆரம்பமாகவுள்ள இந்தப் பயிற்சிகள் பெப்ரவரி 7ம் திகதி வரை இடம்பெறும்.

இவ்வாறு பயிற்சிகளில் கலந்துகொள்ளும் மாணவர்களின், பல்கலைக்கழகங்களில் பதிவு செய்யும் நடவடிக்கைகள் பாதிக்கப்படாமல் இருக்க குறித்த பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்கள் மற்றும் பதிவாளர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

தலைமைத்துவப் பயிற்சிக்காக தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களின் பெயர் விபரங்களை www.mohe.gov.lk என்ற இணையத்தளத்தின் மூலம் அறிந்துகொள்ள முடியும்.