யாழ். மத்திய பஸ் நிலையத்தில் பிச்சை எடுக்கும் பெண்ணொருவருக்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தர்மம் வழங்கினார்.
வடமாகாணத்திலுள்ள சாலைகளுக்கு பஸ்கள் வழங்கும் நிகழ்வு யாழ். மத்திய பஸ் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை (15) நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட முதலமைச்சர், பஸ்களை சாலை முகாமையாளர்களிடம் கையளித்தார்.
நிகழ்வு முடிவடைந்தததும், முதலமைச்சர் தனது வாகனத்தில் ஏறி புறப்பட்டத் தயாரானபோது, முதலமைச்சரின் வாகனத்துக்கும் அருகில் சென்ற மூதாட்டியொருவர் கையை நீட்டி பிச்சை கேட்டார். பிச்சை கேட்ட மூதாட்டிக்கு தர்மம் வழங்கிவிட்டு முதலமைச்சர் சென்றார்.