தமிழ், முஸ்லிம் மாணவக் குழுக்களிடையே மோதல்!

அம்பாறை மாவட்டம் கல்முனையில் உயர்தரம் கற்கும் தமிழ் மாணவக் குழுவுக்கும், முஸ்லிம் மாணவக் குழுவுக்கும் இடையில் மோதல் இடம்பெற்றுள்ளது. இந்த மோதலில் மூவர் காயமடைந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றது என கல்முனைக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உயர்தரக் கல்வி நிலையத்துக்குச் சென்று கல்வி கற்றுவிட்டு வீட்ட்டுக்குத் திரும்புகையிலேயே குறித்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவத்தில் தமிழ் மாணவவர்கள் இருவரும் முஸ்லிம் மாணவர் ஒருவரும் காயமடைந்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor