தமிழ் மன்னர்களின் சிலைகள் திறப்பு விழாவிற்கு அனைவருக்கும் அழைப்பு

யாழ்ப்பாணத்தில் புதிதாக அமைக்கப்பட்ட தமிழ் மன்னர்களின் சிலை திறப்பு விழா நாளை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மூன்று மணிக்கு நடைபெறவுள்து.

silai

இந்நிகழ்வில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறும் விழா ஏற்பாட்டாளர்கள் கோரியுள்ளனர்.

தமிழ மன்னர்களான பண்டாரவன்னியன், எல்லாளன், பரராஜசேகரன் ஆகிய மூன்று மன்னர்களினுடைய சிலைகளும் யாழ் மணிக்கூட்டுக் கோபுர சுற்று வட்டத்தில் புதிதாக நிறுவப்பட்டள்ளன.

இவ்வாறு அமைக்கப்பட்டுள்ள இச் சிலைகள் நாளை ஞாயிற்றுக் கிழமை பாரம்பரியக் கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான அமைச்சர் கே.என. டக்ளஸ் தேவானந்தாவினால் திறந்து வைக்கப்படவுள்ளன.

இந்தநிகழ்வில் சகல மதப்பெரியோர்களும், கலை, கலாசாரம் சார்ந்த அறிஞர்களும், கல்விமான்களும், சமூக ஆர்வலர்களும், சமூகப் பெரியார்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கும்படிகேட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி

யாழ்.மணிக்கூட்டுக் கோபுரத்தைச் சூழ தமிழ் மன்னர்களின் உருவச் சிலைகள்