தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 19 ஆம் திருத்தத்திற்கு ஆதரவு! மூனின் அறிக்கைக்கும் வரவேற்பு!!

அரசமைப்பின் 19ஆவது திருத்தத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் என்று அக்கட்சியின் ஊடகப் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

suresh

தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பாக அரசு இதுவரையில் தகவல்களை வெளியிடவில்லை. எனவே, அது தொடர்பில் விவரங்கள் வெளியான பின்னரே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை வெளியிட முடியும் என்றும் அவர் கூறினார்.

இதேவேளை, இலங்கை விவகாரம் தொடர்பாக தமிழ் மக்களுக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுப்பதற்காக ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ – மூன், பாதுகாப்பு சபைக்கு முன்வைத்த அறிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

உள்நாட்டு விசாரணையில் கூட்டமைப்புக்கு நம்பிக்கை இல்லை என்றும், சர்வதேச விசாரணையே தேவை என்றும் அவர் தெரிவித்தார். சர்வதேச விசாரணை மூலம் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நோக்கமாகும் என்றும் சுரேஷ் எம்.பி. மேலும் கூறினார்.

Related Posts