தமிழீழ வைப்பக நகைகளை மீளளிக்கிறார் ஜனாதிபதி!

தமிழீழ விடுதலைப் புலிகளின் வங்கியான ‘தமிழீழ வைப்பகத்தில் வைப்பில் இடப்பட்ட நகைகளை பொதுமக்களிடம் இன்று ஜனாதிபதி கையளிக்கவுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்தில் இயங்கி வந்த வங்கியான தமிழீழ வைப்பகத்தில் பொதுமக்களால் வைப்பில் இடப்பட்ட நகைகளுக்கான பற்றுச்சீட்டு உள்ள 70 பேருக்கு இன்று ஜனாதிபதியால் குறித்த நகைகள் கையளிக்கப்படவுள்ளன.

இறுதிப் போரின் போது விடுதலைப் புலிகளுக்கு சொந்தமான 100 கிலோக் கிராமுக்கு மேற்பட்ட தங்கக் கட்டிகளையும், பெரும்தொகை பணத்தையும் அரச தரப்பு கைப்பற்றி இருந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.