யாழ்.இந்து கல்லூரிக்கு அருகில் அநாமதேய துண்டுப்பிரசுரத்தினை ஒட்டியவர்கள் என்ற குற்றச்சாட்டில் கைதான இரு இளைஞர்கள் தொடர்பிலான விசாரணைகள் பயங்கரவாதக் குற்றத் தடுப்புப் பிரிவினருக்கு மாற்றப்பட்டதாக கோப்பாய் பொலிஸ் நிலையப் பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்.இந்துக் கல்லூரிக்கு அருகில் ‘தமிழீழம் மலரும்’ என்ற தலைப்பில் அநாமதேய துண்டுப் பிரசுரத்தினை ஒட்டினார் என்ற குற்றச்சாட்டில் யாழ்.கொக்குவில் பகுதியினைச் சேர்ந்த ஜெயதாஸன் கஜானன் (வயது 24), இணுவில் பகுதியினைச் சேர்ந்த மன்மதராசா வேணுகாந்தன் (வயது 24) ஆகிய இருவரும் கோப்பாய் பொலிஸாரினால் கடந்த வியாழக்கிழமை கைதுசெய்யப்பட்டனர்.
இந்நிலையில் குறித்த விடயத்தின் மேலதிக விசாரணைகளை பயங்கரவாதக் குற்றத் தடுப்புப் பிரிவினர் மேற்கொள்ளும் பொருட்டு குறித்த இருவரும் ரி.ஐ.டி யினரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
தொடர்புடைய செய்தி