தமிழில் எக்ஸ்பெண்டபிள்-3!

தென்னிந்திய சினிமாவில் ரஜினி, கமல் சேர்ந்த நடித்தாலோ, அஜீத். விஜய் சேர்ந்து நடித்தாலோஅது உலக அதிசய செய்தி, ஆனால் ஹாலிவுட்டில் படா படா நடிகர்கள் எல்லாம் சேர்ந்து நடிப்பது சர்வ சாதரணம்.

sylvester-stallone-explains-why-the-expendables-3-will-be-rated-pg-13-instead-of-r

நம்பர் ஒன் நடிகர்களான அர்னால்டு, சில்வஸ்டர் ஸ்டோலன், மெல் கிப்சன், ஜெட்லீ, ஜசன் ஸ்டேதம் இணைந்து நடித்த எக்ஸ்பெண்டபிள் படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அதன் மூன்றாவது பாகம் வெளிவர இருக்கிறது. உலகம்முழுவதும் வருகிற ஆகஸ்ட் 15ந் தேதி ரிலீசாகிறது. இந்தியாவில் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளிலும் வெளியாகிறது.

இதுகுறித்து சில்வஸ்டர்சோலன் கூறும்போது, ‘நானும், அர்னால்டும் ஒரு காலத்தில் போட்டியாளர்களாக இருந்தோம், ஏன் பகைவர்களாகவே நடந்து கொண்டோம். இப்போது நட்புடன் இருக்கிறோம், இணைந்து பணியாற்றுகிறோம்.

என் திரையுலக வளர்ச்சிக்கு அர்னால்டும் ஒரு காரணம் என்பதை இப்போது உணர்கிறேன். அதனால் அவர் மீது அன்பு அதிகரித்திருக்கிறது. எக்ஸ்பெண்டபிள் படம்தான் இந்த மாற்றத்துக்கு காரணம் என்கிறார்.

Recommended For You

About the Author: Editor