தமிழரசு கட்சியின் மானிப்பாய் தொகுதிக்கான கிளை கலைக்கப்பட்டுள்ளது

tnaஇலங்கை தமிழரசு கட்சியின் மானிப்பாய் தொகுதிக்கான கிளையின் நிர்வாகம் கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராசாவினால் உத்தியோகபூர்வமாக கலைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பான உத்தியோகபூர்வ ஊடக அறிக்கை இன்னமும் வெளியிடப்பட்டிருக்காத போதும், கலைக்கப்படுவதற்கான கடிதம் கட்சியின் பொதுச் செயலாளரினால் தொகுதிக் கிளையின் நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கலைக்கப்பட்டதற்கான காரணங்கள் இதுவரையிலும் தமிழரசுக் கட்சியினால் தெரிவிக்கப்படவில்லை.