தனுஷ் ஆசையை அஜித் நிறைவேற்றுவாரா?

நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முக கலைஞர் தனுஷ். ‛தொடரி’, ‛கொடி’ படங்களை முடித்துவிட்டு தற்போது, ‛எனை நோக்கி பாயும் தோட்டா’, ‛வட சென்னை’ படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். படங்களில் நடித்து வந்தபோதும் அவ்வப்போது படங்களில் பாடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளார் தனுஷ். சமீபத்தில் கூட தெலுங்கு படம் ஒன்றில் தமன் இசையில் ஒரு பாட்டு பாடினார்.

ajith-danush

இந்நிலையில், அவரிடத்தில் பேட்டி ஒன்றில் எந்த நடிகருக்கு நீங்கள் பாட்டு பாட விரும்புகிறீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த தனுஷ், அஜித்திற்காக ஒரு பாடல் பாட வேண்டும் என்பது என் ஆசை. அது விரைவில் நிறைவேறும் என நம்புகிறேன் என்று கூறினார்.

தனுஷின் இந்த ஆசையை அஜித் நிறைவேற்றுவாரா…?, பொறுத்திருந்து பார்ப்போம்…!

Recommended For You

About the Author: Editor