தனியார் பஸ்- வான் விபத்தில் 4 பேர் படுகாயம்

யாழ்ப்பாணம் மூளாய்ப் பகுதியில் தனியார் பஸ் ஒன்று முன்னால் சென்ற கயஸ் ரக வானுடன் மோதி குடைசாய்ந்ததில் 4 பேர் படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் வெள்ளிக்கிழமை (19) அனுமதிக்கப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

வெள்ளிக்கிழமை (19) மாலை இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து மூளாய்க்கு சென்ற தனியார் பஸ்ஸும் கயஸ் ரக வானுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.

வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

bus-moolai

Related Posts