தனியார் பஸ்கள் தொடர்பில் ஸ்கைப் தொழில் நுட்பம் ஊடாக முறைப்பாடு செய்யலாம்

windows-skypeதனியார் பஸ்கள் தொடர்பாக ஸ்கைப் (Skype) தொழில்நுட்பத்தினூடாக முறைப்பாடு செய்யும் நடவடிக்கை நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கென தனியார் போக்குவரத்து அமைச்சில் விசேட நடவடிக்கைப் பிரி வொன்று தனியார் போக்குவரத்து அமைச்சர் சி.பி. இரத்நாயக்காவினால் உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஸ்கைப் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி புதிய முறைப்பாட்டுப் பிரிவுடன் தொடர்புகொண்ட அமைச்சர் தமிழிலில் முறைப்பாட்டு பிரிவுடன் உரையாற்றினார். தனியார் பஸ்கள் குறித்த முறைப்பாடுகளை 0716550000 எனும் இலக்கத்தினூடாக தொடர்புகொண்டு முன்வைக்க அவகாசம் உள்ளதோடு அமைச்சின் “Privatetransportservices” எனும் ஸ்கைப் முகவரியுடன் தொடர்புகொள்வதினூடாகவோ முன்வைக்க முடியும். பஸ் சாரதிகள் நடத்துநர்கள் தொடர்பான முறைப்பாடுகள், பஸ் சேவை பற்றிய முறைப்பாடுகள், சத்தமாக பாடல் ஒலித்தல், மோசமான படங்களை காண்பித்தல் போன்ற சகல விடயங்கள் குறித்தும் இங்கு முறையிட முடியும் என அமைச்சர் தெரிவித்தார்.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கும் சம்பந்தப்பட்ட மாகாண போக்குவரத்து அதிகார சபைகளுக்கும் பொலிஸ் போக்குவரத்து பிரிவுக்கும் முன்வைத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய அவர், பயணிகளை பாதுகாக்க சகல நடவடிக்கைகளும் எடுப்பதாக குறிப்பிட்டார்.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிலும் முறைப்பாட்டுப் பிரிவொன்று ஆரம்பிக்கப்பட உள்ளது. மிழ், சிங்கள மொழி மூலம் புதிய பிரிவிற்கு முறையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அமைச்சின் புதிய இணையத்தளமும் நேற்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. இதனூடாக தனியார் பஸ்களின் நேர அட்டவணை கட்டணம் குறித்து தகவல் பெற முடியும்.