தனிநாயகம் அடிகளாருக்கு யாழில் உருவச் சிலை

தமிழ்தூது தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு யாழ்ப்பாணத் தமிழ் சங்கம் மற்றும் யாழ்.மறைமாவட்டம் ஆகியவற்றின் ஒழுங்கமைப்பில் குறித்த நினைவு உருவச் சிலை நேற்று மாலை 5மணியளவில் யாழ்.பிரதான வீதியில் திறந்து வைக்கப்பட்டது.

e(15)

இந்த திரு உருவச்சிலையை யாழ்.மறை மாவட்ட பேராயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகையாலும், தனிநாயக முற்றத்தை நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பரமாச்சாரிய சுவாமிகளாலும் திறந்து வைக்கப்பட்டன.

h(6)

மேலும் இந்த நிகழ்வில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,யாழ்.மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா, மாகாணசபை உறுப்பினர்கள், மற்றும் சர்வ மத தலைவர்கள், புனித பத்திரிசியார் கல்லூரி அதிபர்,ஆசிரியர்கள் தமிழ் சங்க உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.