தனிநாடு கோரிக்கை இல்லை: மாவை, சத்தியக்கடதாசி சமர்ப்பிப்பு

இலங்கை நாட்டுக்குள் ஒரு தனியான நாட்டை அமைப்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நோக்கமல்ல என்று இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

mavai mp

உயர்நீதிமன்றத்தில், அவர், நேற்று திங்கட்கிழமை சமர்ப்பித்துள்ள சத்தியக்கடதாசியிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் அரசியலமைப்பிற்கு முரணானது என்றும் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரி, உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுக்கு விளக்கமளிக்கும் வகையிலேயே, சத்தியக்கடதாசி சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.